தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்கள்.

Unknown
0


தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் 11 ஆயிரத்து 645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, எர்னாகுளம், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

➤அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

➤பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

➤சைதாப்பேட்டை மாநகர பேருந்து பணிமனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top