வரலாற்றில் இன்று நவம்பர் 30.

Unknown
0


நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1612 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.
1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1803 – ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
1853 – ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
1872 – உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
1936 – லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
1939 – சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
1943 – இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.
1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்

1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1905)
1835 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
1857 – பொபி எபில், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1936)
1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)
1869 – நில்சு குஸ்டாப் டேலன், சுவீடிய இயற்பியலாளர், பநோபல் பரிசு பெற்றவர் (இ. 1937)
1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)
1950 – வாணி ஜெயராம், இந்தியப் பாடகி
1965 – பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்
1982 – எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை
1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2014)
1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க ஆட்டக்காரர், உலக வாகையாளர்

இறப்புகள்

1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)
1930 – பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ்த் தலைவர், அரசியல்வாதி (பி. 1851)
2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 15வது பிரதமர் (பி. 1919)
2012 – முனீர் மலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1931)

சிறப்பு நாள்

பார்போடஸ் – விடுதலை நாள் (1966)
புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.
புனித அந்திரேயா தினம் – இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் உள்ளது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top