தூக்கணாங் குருவி.

Unknown
0




சிட்டுக்குருவிகளின் இனம் அழிந்து வருவதாக ஒரு பக்கம் வேதனை அடைந்தாலும் இன்னும் அதன் பல வகையான இனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைக் காணும் போது மனதிற்கு ஆறுதல் தருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் அதிக அளவில் தூக்கணாங்குருவிகள் கூடுகட்டிவாழ்கின்றன. இதை வீவிங் பேர்டு என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்த தூக்கணாங்குருவிகள் சிட்டுக்குருவிகளின் இனமாகும். தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் மஞ்சள் நிறத்துடன் இந்த குருவிகள் அரிதாக காணப்படும்.

சிட்டுக்குருவி போன்றே தானியங்களை உண்ணும் பண்புடையது. நெற்கதிர்கள் முற்றியவுடன் கூட்டம் கூட்டமாக வந்துவிடும். ஆண் பறவைகள் நெற்பயிரின் இலைகளை நார்நாராக கிழித்துகொண்டு வந்து கூடு கட்டும். ஈச்சமரம், கருவேலமரம், மின்கம்பிகள், முள்செடிகள், இலந்தைமரம், பனைமரம், தென்னை மரங்களில் கூடுகட்டும். கூட்டுக்குள் தளம் அமைத்து பெண் குருவிகள் முட்டையிடும். களிமண்ணைக் கொண்டு வந்து வைத்து அதில் மின்மினிப் பூச்சிகளை பிடித்து வந்து வைத்து கூட்டை அழகுபடுத்தும் குருவிகள் இவை.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top