பேராவூரணி அடுத்த முடச்சிக்காட்டில் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாத சமத்துவபுரம் அச்சத்துடன் வசிக்கும் மக்கள்.

Unknown
0
பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் முடச்சிக்காடு ஊராட்சிகலைஞர் நகரில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுர குடியிருப்புகளை கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று திமுக ஆட்சியில் அப்போதைய துணைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி, நிதித்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.அப்போதைய மதிப்பில் ரூ.2.53 கோடியில் அனைத்துஅடிப்படை வசதிகளுடன் நூறு வீடுகள், அன்றைக்கு மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முகம் மேற்பார்வையில் கட்டப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு வழங்கப்பட் டது.

ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது முடச்சிக்காடு சமத்துவபுரம் போதிய கண்காணிப்பு இன்றி பாழடைந்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் போடப்பட்ட சாலைகள்பெயர்ந்து, குண்டுங்குழியுமாக உள்ளது. மேலும் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் மின் வயர்கள் அறுந்து தொங்குகிறது. குடியிருப்பு பகுதிகளில் உள்ளபெரும்பாலான தெருவிளக்குகள் இரவில் எரிவதில்லை என குடியிருப் போர் தெரிவிக்கின்றனர். மேலும் மிக அருகிலேயே காட்டாறு ஓடுவதால், தற்போது மழைக்காலமாக இருப்பதால் பாம்பு போன்றவிஷ ஜந்துக்கள் குடியிருப் புக்குள் புகுந்து விடுகின்றன.

சிறு குழந்தைகளுடன் வசிப்பதால், அச்சத்துடனே வசிப்பதாக சமத்துவபுரவாசிகள் தெரிவிக்கின்றனர். எரியாத மின்விளக்குகளை மாற்றித்தர வேண்டும் என்றனர்.குடியிருப்பு பகுதிகளில்குப்பைகள் அகற்றப்படாமலும், சில இடங்களில் வாய்க் கால் மற்றும் பள்ளங்களில் மழைநீர், கழிவு நீர் தேங்கி கொசுக்கடி தொந்தரவிற்கு ஆளாகி தூங்க முடியாத நிலை உள்ளது என்கின்றனர். தற்போது சேதுபாவாசத்திரம் வட்டார பகுதிகளில்மர்மகாய்ச்சல் பரவி வரும்சூழலில் முடச்சிக்காடு சமத்துவபுரம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது கண்கூடாக தெரிகிறது. சமத்துவபுர நுழைவு வாயிலில் அமைக் கப்பட்டுள்ள பெரியார் சிலையை சுற்றிலும் புதர்கள் மண் டிப்போய் காணப்படுவதில் இருந்தே இதன் பராமரிப்பை தெரிந்து கொள்ளலாம்.மேலும் பூக்கொல்லை பகுதியிலிருந்து சுமார்1 கிலோமீட்டர் தூரம் பூக் கொல்லை -சம்பைபட்டினம் சாலை மின்வசதி இல்லாமல் உள்ளது.

வேலை முடிந்தும், பள்ளிகளில் சிறப்பு வகுப்பு முடிந்து இரவு நேரங்களில் வரும் மாணவ, மாணவியர் அச்சத்துடனேயே வரும் நிலை உள்ளது.இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) முறையிட்டும் பயனில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள்எதையும் கண்டுகொள்ளாமல், தங்களுக்கு வருமானம் கிடைக்கும் செயல்களில் தான் கவனம் செலுத்துகின்றனர் என்ற பேச்சு பரவலாக உள்ளது. சமத்துவபுரம் நிலைகுறித்து விசாரித்த எதிர்க்கட்சி பிரமுகரிடம், “உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” என வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அலட்சியமாக பதில்அளித்ததாகவும் கூறப்படுகிறது.எனவே மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி சமத்துவபுரத்தை சீர்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி:தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top