தஞ்சையை அடுத்த செந்தலை சோழர்கால சிவாலயம்.

Unknown
0














 

தஞ்சையை அடுத்த செந்தலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஊர் கருப்பூர் ஆகும். சோழர்கால கல்வெட்டில் “ஆர்க்காட்டுக்கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர்” என்று இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஊரில் நெடுஞ்சாலையை ஒட்டி சிதைவுற்று அழியும் நிலையில் “மீனாட்சி சுந்தரேசர் கோவில்" உள்ளது இங்கு திகழும் கற்றளியான சிவாலயம் சோழர்கள் காலத்தியது.

சிதிலமடைந்த இந்த கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் தரையில் இருந்து 2 அடி உயரத்தில் அமைந்துள்ள கட்டுமானத்தை சுற்றிலும் விஜயநகர மன்னர்கள் காலத்து வாளும், கேடயமும் கொண்டு போரிடும் போர்வீரனின் சிற்பங்கள் மிக சிறிய அளவில் 12 செ.மீட்டர் வட்டத்திற்குள் செதுக்கப்பட்டுள்ளது. போர் செய்யும் வீரனின் பல்வேறு நிலைகள் இந்த சிறிய சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன.


இந்த கோவிலின் கருவறையில் சோழர்காலத்து சிவலிங்கமும், அருகில் மற்றொரு "ஸ்ரீ சகுந்த குந்தளாம்பாள்” சன்னதியில் சோழர் காலத்து அழகிய அம்மன் சிற்பமும் காணப்படுகின்றன. கருவறையின் உட்சுவரில் பிற்காலத்திய ஓவியம் அமைந்துள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top