எனவே சேதமடைந்துள்ள அனைத்து மின்கம்பங்களையும் மாற்றி, புதிதாக அமைத்துத்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச் சாமி கூறுகையில், மருங்கப் பள்ளம் ஊராட்சியில், கைலான்குளம் மயானம் எதிரிலும், முக்கியத்துவம் வாய்ந்த முசிறி- சேதுபாவாசத்திரம் சாலையிலும், மருங் கப்பள்ளம் ஊராட்சியில் பலஇடங்களிலும் மின்கம்பங் கள் சேதமடைந்துள்ளன. மின்வாரிய அதிகாரிகள் மின் பாதையை முறையாக ஆய்வு செய்வதில்லை. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர்அதிகாரிகள் மின்கம்பங் களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

