மல்லிப்பட்டினத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

Unknown
0
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு இணைந்து, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து மீட்டுத் தரக்கோரியும், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும்  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினத்தில், வியாழக்கிழமை அன்று மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே.பஷீர் அகமது தலைமை வகித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மாணவரணி செயலாளர் தங்க.சந்திரபோஸ் வரவேற்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மாணவரணி செயலாளர் ரவி பிரகாஷ், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், த.ம.பு.க கொள்கை பரப்புச்செயலாளர் ஆறு.நீலகண்டன், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் ச.அப்துல் சலாம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் அனல்.ச.ரவீந்திரன், திராவிடர் விடுதலைக்கழகம் தா.கலைச்செல்வன், மெய்ச்சுடர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு   கண்டன உரையாற்றினர். நிறைவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ப.ரவி நன்றி கூறினார்.

நிறைவாக மீன்துறை உதவி ஆய்வாளர் மோனிகாவை சந்தித்து," ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ 25 இலட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை உடனடியாக தேடி கண்டுபிடிக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்பிற்கென ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top