
கணினி ரசீது இல்லாமல் உரங்கள் விற்றால் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை.
December 30, 2017
0
உர விற்பனையினை வரையறைப்படுத்தி ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்பதற்கு ஏதுவாகக்கூடிய வகையிலும், இனிவரும் காலங்களில் விற்பனை ரசீது இல்லாமல் உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்என்றும் அரசு உத்தரவிட் டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் சில்லரை உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு விற் பனை முனை இயந்திரத்தில் உரங்களின் இருப்பு விற் பனை மறு பதிவேற்றம் செய்வது குறித்த சிறப்பு முகாம் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற் றது.முகாமை பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் துவக்கி வைத்து பேசியதாவது: உரஇருப்பு பதிவேட்டில் உள்ளஉரங்களின் இருப்பு விபரங்களை எவ்வித விடுபாடுகளுமின்றி விற்பனை முனைஇயந்திரத்தில் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். 1.1.2018 முதல் அனைத்துஉரங்கள் வரத்து மற்றும் விற்பனை விபரங்களை விற்பனை முனை இயந்திரம் மூலம் மட்டுமே பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை கட்டாயமாக்கப்பட வேண் டும். விவசாயிகளுக்கு கணினி விற்பனை ரசீது இல்லாமல் உரங்கள் விற்பனை செய்வதை அறவே தவிர்க்கவேண்டும். மீறி செயல்படுவோர் மீது உரக்கட்டுப்பாடு சட்டம்.1985-ன்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.தஞ்சாவூர் தரக்கட்டுப் பாடு வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.வித்யா விற்பனை முனை கையடக்க கருவியினை பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக் கம் செய்து காட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், நன்மை செய்யக் கூடிய இயற்கை எதிரி பூச்சிகளை எளிதில் கொல்லும் தன்மையுடைய அதிக விஷமுடைய பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags
Share to other apps