பேராவூரணி சேது சாலையில் உள்ள மதுக்கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் பிப்ரவரி 03.

Unknown
0
பேராவூரணியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

01.10.2017 இல் கோரிக்கை ஆர்ப்பாட்டம், தொடர்ந்து வியாபாரிகளிடம் கையெழுத்து இயக்கம், 22.10.2017 இல் மதுக்கடை முற்றுகையிடும் போராட்டம், 28.10.2017 இல் வட்டாட்சியர் தலைமையிலான சமாதானக் கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் 30.12.2017 க்குள் கடையை அப்புறப்படுத்திக்கொள்வதாக எழுத்து பூர்வமாக கொடுத்த உறுதி மொழி, கொடுத்த உறுதிமொழியின் படி கடை அகற்றப்படாததால் மீண்டும் 31.12.2017 இல் முற்றுகைப் போராட்டம், அன்றே கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம், கூட்டத்தில் 20.01.2018 க்குள் கடையை அப்புறப்படுத்திக் கொள்வதாக கோட்டாட்சியரின் எழுத்துபூர்வமான உறுதி மொழி இவ்வளவு நடந்தபின்னும் டாஸ்மாக் நிர்வாகம் கடையை அப்புறப்படுத்தாததால் அடுத்த கட்ட போராட்டம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் தலைமையில் சி.பி.எம். பொறுப்பாளர்கள் கருப்பையா, வேலுச்சாமி, சி.பி.ஐ. பொறுப்பாளர் இராசமாணிக்கம், ம.தி.மு.க. பொறுப்பாளர் வ.பாலசுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் திலீபன், வெற்றிச்செல்வன், தமிழ்க்குமரன், திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர்கள் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன், மனிதநேய ஜனநாயகக் கட்சிப் பொறுப்பாளர் ச.அப்துல்சலாம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கப் பொறுப்பாளர் த.ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழக பொறுப்பாளர் இரா.மதியழகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொறுப்பாளர் ஆசீர்வாதம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பல்வேறு அகிம்சை வழியிலான மக்கள் போராட்டத்திற்கும், அரசு அதிகாரிகள் - போராட்டக்குழு சமாதானக் கூட்டத்தின் முடிவுகளுக்கும் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக மக்கள் விரோதமாகச் செயல்பட்டு வரும் டாஸ்டாக் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கும், மாணவிகளுக்கும் இடையூறாக இயங்கிவரும் மதுக்கடையை மாணவர்கள், பெற்றோர்கள், கடைத்தெரு வியாபாரிகள், பல்வேறு இயக்கத்தினர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதி பூட்டுப்போடுவது என தீர்மானிக்கப்பட்டது.





நன்றி: மெய்ச்சுடர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top