வரலாற்றில் இன்று ஜனவரி 07.

Unknown
0
ஜனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான்.
1558 – காலே (Calais) நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது.
1598 – ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான்.
1608 – வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
1610 – கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்தார்.
1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
1789 – ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
1935 – முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1950 – அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.
1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
1972 – ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை), (இ. 1585)
1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், அஞ்சல் ஒன்றியத்தைத் தோற்றுவித்த செருமானியர் (இ. 1897)
1844 – பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (இ. 1879)
1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமூக சேவையாளர்
1943 – சடாகோ சசாகி, இரோசிமா, நாகசாக்கி அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர் (இ. 1955)
1948 – இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்
1953 – பாக்கியராஜ், திரைப்பட இயக்குநர், நடிகர்
1964 – நிக்கோலஸ் கேஜ், அமெரிக்க நடிகர்
1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை

இறப்புகள்

1943 – நிக்கோலா தெஸ்லா, செர்பிய அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1856)
1989 – இரோகிட்டோ, யப்பானிய மன்னர் (பி. 1901)
1995 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1926)
2011 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (பி. 1941)

சிறப்பு நாள்

கிறித்துமசு (கிழக்கு மரபுவழி திருச்சபை யூலியன் நாட்காட்டியில்)
இனப்படுகொலை நாளில் இருந்து வெற்றி நாள் – (கம்போடியா)

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top