போராவூரணி பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு அறுவடை தீவிரம்.

Unknown
0
பொங்கல் பண்டிகையையட்டி போராவூரணி மற்றும் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
கரும்புகள்  விலை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததாலும் வேலையாட்கள் பற்றாகுறையாலும் கரும்புகளின் விலை உயர தொடங்கியுள்ளது.

ஒரு கரும்பின் விலை ரூ.25 -முதல் ரூ.35 -வரையிலும் பத்து கரும்பு கொண்ட கட்டு ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் ஒரு சில இடங்களில் விவசாயிகள் விற்க தொடங்கியுள்ளனர். இன்னும் அறுவடை அதிகமாக தொடங்கும் போது இதன் விலை இன்னும் குறைய தொடங்க வாய்ப்பு உள்ளது.அறுவடைக்கு தயார் சில இடங்களில் தற்போது வயலிலேயே கரும்புகளை வைத்து சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்- கரும்பு ஓராண்டு கால பயிர், நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் சாகுபடி செய்தோம் அவைகள் தற்போது சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை ஆள் பற்றாக்குறை போன்றவையால் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. அதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே கடந்த ஆண்டை விட கூடுதல் விலைக்கு விற்றால்தான் ஈடுகட்ட முடியும். மேலும் விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு 2 அல்லது 3 நாட்கள் உள்ள நிலையில்தான் மொத்தமாக அறுவடை செய்வோம் என்றார்.Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top