
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
January 11, 2018
0
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, வருவாய் கிராமஉதவியாளர்கள் ஒருநாள்ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் கே.சிவகுமார் தலைமை வகித்தார்.செயலாளர் கே.விஜயா, மாவட்ட தலைவர் அ.கா.தங்கராசு, மாவட்ட துணைத் தலைவர் சி.பரஞ்சோதி ஆகியோர் பேசினர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15 ஆயிரத்து 700-ஐ கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும். பொங்கல்போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Tags
Share to other apps