
பேராவூரணி அடுத்த கைவனவயலில் காருடை அய்யனார் உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கை மற்றும் பொருட்களை கொள்ளை.
January 25, 2018
0
பேராவூரணி அருகில் உள்ள கைவனவயலில் காருடை அய்யனார் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள், கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். பின்னர் அந்த உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கைகளை கொள்ளையடித்தனர். இதையடுத்து அருகில் இருந்த குளத்தில் உண்டியலை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் கோயிலில் இருந்த ஒலிப்பெருக்கிகளை திருடி சென்றுள்ளனர். பக்தர்கள் காணிக்கை மற்றும் திருட்டுப்போன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இதுகுறித்து பேராவூரணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Share to other apps