பேராவூரணி கருகும் சம்பா பயிர்கள் கடைமடைப்பகுதியில் தண்ணீர் இல்லை விவசாயிகள் கவலை.

Unknown
0
பேராவூரணி கடைமடை பகுதியில் சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தில் பயிர்கள் கருகும் அபாயம் விவசாயிகள் வேதனை.
பேராவூரணி,சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள கட்டையங்காடு, பூவணம், பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், வாத்தலைக்காடு, வீரியங்கோட்டை, மரக்காவலசை, முடச்சிக்காடு, கைவனவயல், கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், விளங்குளம், சோலைக்காடு, முதுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஒருபோகம் சம்பா சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது. நெல் சாகுபடியை தவிர்த்து பெரும்பாலன பகுதிகளில் தென்னை சாகுபடியும் மேற்கொண்டுள்ளனர். குறைந்த அளவு விவசாயிகள் மட்டும் நெல் சாகுபடி செய்துவரும் வேலையில் .
இந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கோடை சாகுபடியும் செய்ய முடியவில்லை. தற்போது கடைமடையில் போதுமான மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. அதேநேரம் மேட்டூர் அணையும் ஓரளவு நிரம்பி காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டாவது ஒரு போகம் சம்பா சாகுபடி செய்து விடலாம் என எண்ணியிருந்த கடைமடை விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அணை திறந்தும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை.

கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையை பயன்படுத்தியும் மேட்டூர் அணையிலிருந்து கிடைத்த குறைந்தளவு தண்ணீரை கொண்டு நேரடி விதைப்பு மூலமாகவும், நாற்றங்கால் அமைத்தும் சம்பா சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. நடவு பணி முடிந்து கடந்த 30 நாட்களாக அந்த பயிற்களுக்கு தண்ணீர் இல்லாமல் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதணையடைந்துள்ளனர்.
இது குறித்து பள்ளத்தூர் விவசாயி கு.அ.கூத்தலிங்கம் கூறுகையில் கல்லணை கால்வாய் புதுப்பட்டிணம் வாய்க்காலில் தண்ணீர் திறந்து இப்பகுதிக்கு இரண்டு தினங்களுக்கு மட்டுமே வந்தது. கடந்த ஒரு மாத காலமாக புதுப்பட்டிணம் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இதனால் பள்ளத்தூர் , ஆண்டிக்காடு பகுதியில் 40 ஏக்கருக்கு மேல் நடவு பணி மேற்கொண்ட நிலையில் தண்ணீர் இல்லாமல் நடவு செய்த பயிர்கள் கருகிவருகிறது. மேலும் ஆண்டிவயல் மற்றும் மருதங்கவயல் பகுதிகளில் நேரடி விதைப்பு மூலமாக சுமார் 40 ஏக்கர் பரப்பில் சம்பா சகுபடி செய்துள்ளனர் இப்பகுதியில் உள்ள பயிர்களும் தண்ணீர் இல்லாமல் கருகிவருகிறது. போதிய மழையும் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பவில்லை. ஆகையால் கடைமடை பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்ற கல்லணை கால்வாய் புதுப்பட்டிணம் வாய்க்காலில் தண்ணீர் வர தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
படவிளக்கம்: 1.தண்ணீர் இல்லாமல் பள்ளத்தூர் பகுதியில் கருகும் அபயாத்தில் உள்ள நெற்பயிர்.
2. கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வரமால் காய்ந்து கிடக்கும் பள்ளத்தூர் பகுதியில் உள்ள புதுப்பட்டிணம் கிளை வாய்க்கால்

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top