தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுைற விவசாயிகளுக்கு ஆலோசனை.

Unknown
0
தென்னையில் காணப்படும் சாம்பல் சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் விளக்கமளித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தென்னைக்கு மற்ற சத்துக்களை விட சாம்பல் சத்துதான் மிக அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சத்து குறைந்தால் தேங்காய் அளவு சிறுத்து, எண்ணிக்கையும் குறைந்து விடும். மேல்இலைகள் பசுமையாக இருந்தாலும் அடி இலைகளில் வெளிர்பச்சை நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமடையும் இலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கும்.

முதிர்ச்சி அடையும் முன்பே இலைகள் உதிர்ந்து விடும் இக்குறையினை போக்கிட 5 வருடங்களுக்கு மேல் வயதுடைய தென்னைமரத்திற்கு ஒரு வருடத்திற்கு 50 கிலோ நன்கு மக்கிய தொழுஉரத்துடன் யூரியா 1.300 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.500 கிலோ உரங்களை கலந்து மரத்தடியில் இருந்து 5 அடி தள்ளி வட்டமாக உரமிட்டு மண்வெட்டியால் உரத்தை மண்ணுடன் கலந்து பிறகு நீர்பாய்ச்ச வேண்டும்.
மேற்கண்ட உரத்தினை இரண்டாக பிரித்து ஜூன் , ஜூலை மாதத்திலும், டிசம்பர், ஜனவரி மாதத்திலும் இரண்டு முறையாக பிரித்து இட வேண்டும். பொட்டாஷ் உரம் 2 கிலோவிற்கு பதிலாக 3.500 கிலோ இடுவதினால் தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்படுத்தப்படுகிறது. போரான்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால்  தென்னைமரத்திற்கு ஆண்டுதோறும் ஒரு மரத்திற்கு ஒரு கிலோ வீதம் தென்னை நுண்ணூட்ட சத்து உரத்தினை இட வேண்டும் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான தென்னை ஊட்டச்சத்துகரைசல் (தென்னை டானிக்) மரம் ஒன்றுக்கு 200 மில்லி வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை வேர்மூலம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top