பேராவூரணி நடைபெற்ற கூட்டத்தில் தேங்காய் மட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப அனுமதிக்கக் கூடாது தென்னை சார் தொழில் செய்வோர் கோரிக்கை.

Unknown
0


தென்னை சார்ந்த தொழில் செய் வோர் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் பிப்.12 ஆம்தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி எதிரில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு அக்ரி கோவிந்தராஜூ தலைமை வகித்தார். மா.கணபதி வரவேற்றார். கூட்டத்தில், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள400க்கும் மேற்பட்ட கயறு தொழிற் சாலை வைத்திருப்போரை ஒருங்கிணைத்து புதிதாக சங்கத்தை கட்டமைத்தல், தேங்காய் மட்டை விலை உயர்வு காரணமாக, தொழில் நடத்த முடியாத சூழல் உள்ளது.

இதுகுறித்து வரும் பிப்ரவரி.15 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் கூடி பேசி முடிவு செய்வது. தொடர்ந்து தொழிற்சாலைகளை மூடி போராடுவது, அதுவரை மட்டைகளை கொள்முதல் செய்வதில்லை எனவும், கோர்வை மட்டைகளை தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்செய்வோருக்கு மட்டுமே வழங்க வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்து,தொழிலை நலிவடைய செய்யாமல் காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சை, புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, மட்டை உற்பத்தியாளர், கயறு தொழிற்சாலை நடத்துவோர் என இருதரப்புக் கும் கட்டுப்பாடியாகும் வகையில் கலந்து பேசி விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் க.அன்பழகன், முத்தலிப், சுரேஷ், குமணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தமிழகத்திலேயே தென்னை மற்றும் அதனை சார்ந்த உபதொழில் களுக்கு பெயர் பெற்றது தஞ்சைமாவட்டம் பேராவூரணி பகுதியாகும். தேங்காய் உற்பத்தி, கொப்பரை தயாரித்தல், கயறு தயாரித்தல், தென்னை மட்டை கழிவு பஞ்சிலிருந்து கேக் தயாரித்து ஏற்றுமதி செய்தல் என பல்வேறு துணைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே தென்னை நார், தென்னை உற்பத்தி பொருட்கள் தயாரிப்போர், தென்னை மட்டையை ஏற்றிச் செல்லும்லாரி உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும், தொழிலில் பல் வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி தொழில் செய்வதில் உள்ள இடர்பாடுகளை களைந்து,தேக்க நிலை ஏற்படாமல் இருக்க, தென்னை சார்ந்த தொழில் செய்வோர்கூட்டமைப்பை ஏற்படுத்தி ஆலோசனை நடத்தினர்.



 நன்றி:தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top