
பேராவூரணி அடுத்த ரெட்டவயல் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு.
March 09, 2018
0
பேராவூரணி அடுத்த ரெட்டவயல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடுநிலவுகிறது. ஊராட்சி சார்பில் போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் அனைத்தும் வறண்டதால், நிலத்தடி நீர்மட்டம்அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. மின் மோட்டார் களும் பழுதடைந்துள்ளன. சுற்று வட்டாரப் பகுதி குளங்கள், நீர்நிலைகள் அனைத்தும்நீரின்றி வறண்டுள்ளதால் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் கால்நடைகளுக்கு நீரின்றியும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைஎடுத்து ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர்மட்டத்தை எட்டும்அளவுக்கு புதிய குழாய்களைப் பதித்தும், அதிக குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பொருத்தியும் இப்பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவேண்டும் என ரெட்டவயல் பொதுமக்கள் வலியுறுத்தியுள்னர்.


Tags
Share to other apps