
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா.
March 07, 2018
0
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அ.அங்க யற்கண்ணி தலைமை வகித்தார். வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஏ.காஜாமுகைதீன் வரவேற்றார். தலைமை ஆசிரியை ச.சித்ராதேவி ஆண்டறிக்கை வாசித்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார். மேலும் மாணவ,மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை பெ.ரேணுகா நன்றி கூறினார்.

Tags
Share to other apps