குருவிக்கரம்பையில் வீணாகும் கூட்டுத்திட்ட குடிநீர்.

Unknown
0
பேராவூரணி தாலுகாமுழுமையுமே தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லை. இயற்கையும் இப்பகுதியை வஞ்சித்துவிட்டது. மழை இல்லை, இதனால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து, ஆழ் குழாய் கிணறுகளில் நீர்மட்டம் பெரிதும் கீழிறங்கியுள் ளது. ஆழ்குழாய் கிணற்றை பயன்படுத்துவர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மறுசீரமைப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அரசு பலலட்சம் ரூபாய் செலவு செய்துகொள்ளிடத்தில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம்பேராவூரணி, குருவிக் கரம்பை, பெருமகளூர் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவர குழாய் பதித்து வேலைகள் முடிவடைந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில் முசிறியில் இருந்து பேராவூரணி வழியாக சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகம்செல்லும் மாநில நெடுஞ் சாலையை விரிவுபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குருவிக்கரம்பைக்கு செல்லும் சாலையின் கைகாட்டி அருகே சாலை விரிவுபடுத்தும் பணிக்காக ஜே.சி.பிஇயந்திரம் மூலம் குழி தோண்டும் போது, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் உடைந்து, தண்ணீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது. இப்பகுதியில் பல இடங்களில் பொதுமக்கள் உபயோகத்திற்கும் கால்நடைகளுக்கு குடிநீருக்காகவும் திண்டாடிவரும் இந்நாட்களில் கடந்த பத்து தினங்களாக தண்ணீர் வீணாவதை கண்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக் கின்றனர். குழாய் உடைப்பை சரிசெய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top