பேராவூரணி அடுத்த களத்தூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்.

Unknown
0
பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சரகம்,  களத்தூர் மேற்கு கிராமத்தில்    62 ஏக்கர் 33 சென்ட்  பரப்பளவு கொண்ட  களத்திகுளம் ஏரி தனிநபர்களால்  மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு சுமார் 25 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் தென்னந்தோப்பாகவும், கரும்பு கொல்லையாகவும் மாற்றி தங்கள் அனுபவத்திற்கு வைத்திருந்தனர். இதனால் ஏரி சுருங்கி தண்ணீர் வரத்து பாதைகள் அடைபட்டிருந்தன. இதனால்,  இந்த ஏரியை நம்பி பாசனம் செய்வோர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து இதே கிராமத்தை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற  நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக,  பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார்  மற்றும் பொதுப்பணித் துறை  உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றிடும் பணி நடைபெற்றது.  திருச்சிற்றம்பலம் காவல் துறை ஆய்வாளர் செந்தில்குமரன்,  திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி, களத்தூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர் உடன் இருந்தனர்.  ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top