பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

Unknown
0
பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் கடைசி மீட்டர் கேஜ்பாதை என சொல்லப்பட்ட காரைக்குடி - திருவாரூர் இடையே கடந்த மார்ச் 2012 ஆம் ஆண்டு, அகல ரயில் பாதைஅமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 70 கி.மீ தூரத்தில் சிறியதும், பெரியதுமான பாலங்கள் 40 க்கும் மேற்பட்டவை அமைக்கப் பட்டன. அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டையில் பெரிய அளவில்ரயில்வே நிலையம் அமைக்கப்பட் டுள்ளது. கண்டனூர் - புதுவயல், வாளராமாணிக்கம், மேற்பனைக்காடு, ஒட்டங்காடு இடையே சிறிய ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையேயான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே பயணிகள் ரயில் வெள்ளோட்டமும் விடப்பட்டு, இரண்டு மாத காலம்ஆன நிலையில் இதுவரை மீண்டும் ரயில் இயக்கப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமாவதாக கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, கட்டி முடிக்கப் பட்ட ரயில் நிலையங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பராமரிப்பின்றி சீரழிந்து வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள புதிய ரயில் நிலைய அலுவலக கண்ணாடி ஜன்னல் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே அலுவலர்களோ, பணியாளர்களோ, காவலர்களோ இல்லாத நிலையில் இரவுநேரங்களில் சமூக விரோதச் செயல் கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காலை, மாலை நேரங்களில் சமூக விரோதிகள் ரயில்வே நிலையத்தில் அமர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சமூக விரோதிகள் அலுவலக கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உறங்குவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு இல்லாததால் ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் சமூக விரோதச் செயல்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே அதிகாரிகள் முன் வர வேண்டும். விரைவில் ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top