
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை முகாம்.
June 02, 2018
0
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.சௌந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கண் பரிசோதகர் திரவியம் கண் நோயாளிகளை பரிசோதனை செய்தார். முகாமில் 67 நபர்கள் சிகிச்சை பெற்றனர். இதில் 25 நபர்களுக்கு கண்புரை இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு, நவீன பேக்கோ முறையிலான கண் அறுவை சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு இராஜா மிராசுதார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புற நோயாளிகளுக்கு கண் சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் மருந்தாளுநர் சரவணன், செவிலியர்கள் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags
Share to other apps