பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் - வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி. பேராவூரணி கிழக்கு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. 30 பள்ளிகளைச் சார்ந்த 55 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் பல கட்டங்களாக போட்டிகள் நடை பெற்றன. ஐந்து வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும், ஆறு முதல் எட்டு வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மாலதி தலைமையில், வட்டார கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், அங்கையர்க்கன்னி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகம் சார்பில் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த.பழனிவேல், பொருளாளர் சித.திருவேங்கடம், நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். நிறைவாக ஆசிரியர் சுபாஷ் நன்றி கூறினார்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்- வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி.
July 18, 2018
0
Tags
Share to other apps