பேராவூரணி கழனிவாசல் ஊராட்சியில் விளையாட்டுப் போட்டிகள் .

0
பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - தஞ்சாவூர் மாவட்டப் பிரிவு சார்பில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மே.கலா தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சாந்தி, புஷ்பம், க.இளமதி, ஊராட்சி செயலாளர் நதியா, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர். தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நன்றி:தீக்கதிர் 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top