பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் சென்று சேருவதற்கு ஏதுவாக பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தாசில்தார் பாஸ்கரன் ஆய்வு செய்தார் .பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளுக்கு சாகுபடிக்காக தண்ணீர் சென்று சேரும் வகையில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அதன்படி பின்னவாசல் வடபாதி வாய்க்கால், வாத்தலைக்காடு, குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தாசில்தார் பாஸ்கரன் உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசன்னா, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜூ உடனிருந்தனர்.
பேராவூரணி பகுதியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு.
July 24, 2018
0
Tags
Share to other apps