தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க கிளை சார்பில் 8-ஆவது கலை இலக்கியக் கூடல் தஞ்சை பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கொன்றைக்காடு தெட்சிணாமூர்த்தி, கவிஞர் மணக்காடு ஜெயச்சந்திரன் ஆகியோர் தமுஎகச அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். கவியரங்கமும் நடைபெற்றது. நிகழ்வில் "உழவுத் தொழிலின் மேன்மை" குறித்து கவி பாடிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் காஜா மொய்தீனுக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் விஜயகுமார் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். சங்கத் தலைவர் சமந்தா, செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பொருளாளர் தா.கலைச்செல்வன், ஆர்.எஸ்.வேலுச்சாமி, பேரா.முனைவர் ச.கணேஷ்குமார், ஆசிரியர் வால்கா, எழுத்தாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில் தமுஎகச கலை இலக்கியக் கூடல்.
July 09, 2018
0
Tags
Share to other apps