பேராவூரணி கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு.

0
சொர்ணக்காடு கடைவீதியில் அறந்தாங்கி மெயின் ரோட்டில் வீரக்குடி, சொர்ணக்காடு, மணக்காடு, ரெட்டவயல் பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடைமடை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வி.அண்ணாதுரை தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க பேராவூரணி பொறுப்பாளர் வி.கருப்பையன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ராஜாமுகமது, சேகர், ஜெகநாதன், கருப்பையா, ரவிச்சந்திரன், ஏ.கே.கண்ணன், ராஜேஷ் கண்ணா, கோவிந்தராஜ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி தாசில்தார் எல்.பாஸ்கரன், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருச்சிற்றம்பலம் செந்தில் குமரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசன்னா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வாய்க்கால்களை பார்வையிட்டு வந்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்தலாம் விவசாய சங்க நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் பாசன வாய்க்காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

பின்னர் வீரக்குடி, சொர்ணக்காடு கிளை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து, முழு கொள்ளளவான 50 கன அடி தண்ணீர் முறை வைக்காமல் வழங்குவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியிலில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பேராவூரணி-அறந்தாங்கி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நன்றி:தினத்தந்தி 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top