மல்லிப்பட்டினத்தில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு படகுப்போட்டி.

IT TEAM
0




மல்லிப்பட்டினத்தில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு படகுப்போட்டி. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவ10ர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தில் இன்று (25.03.2019) படகுப்போட்டி நடைபெற்றது. படகுப்போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் கொடி அசைத்து துவக்கிவைத்தார். படகுப்போட்டியில் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல், சின்னமனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர். கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இப்போட்டியில் 10-க்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் பங்கேற்றன. படகுப்போட்டியில் முதலிடம் பிடித்த கள்ளிவயலை சேர்ந்த அசலார்முகமது என்பவருக்கு வெற்றிக்கோப்பை மற்றும் ரூ.3000 பரிசு தொகையை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார். மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த கோபி என்பவர் இரண்டாம் இடத்தையும், கள்ளிவயலைச் சேர்ந்த அப்துல்ஹமீது என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். படகுப்போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. படகுப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். படகுப்போட்டி நிறைவுப்பெற்ற பின்னர்; மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, துணை ஆட்சியர் கமலக்கண்ணன்,மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், வட்டாட்சியர்கள் அருள்பிரகாசம் (பட்டுக்கோட்டை), ஜெயலெட்சுமி (பேராவூரணி), மீன்வளத்துறை ஆய்வாளர்கள் துரைராஜ், கங்கேஷ்வரி மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், படகு சங்க உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: அதிரை நியூஸ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top