பேராவூரணி நீலகண்டபுரம் ரயில் பாலத்தை விரைவில் திறக்கக் கோரிக்கை.

IT TEAM
0

பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நீலகண்டபுரம் ஆளில்லா ரயில்வே கேட்டை காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை சீரமைப்பின் போது நிரந்தரமாக மூட ரயில்வேத் துறை முடிவு செய்தது. இதை எதிர்த்து கழனிவாசல், கொரட்டூர், சோழகனார் வயல், ரெட்டவயல் என 30- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தொடர்ந்து ரயில்வே பாதை உபயோகிப்பாளர் கூட்டமைப்பு சங்கம் ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து ரயில்வே கேட்டை மூடாமல் இருக்க வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இதற்கு மாற்றாக ரயில்வே கீழ்பாலம் அமைக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இதுவரை பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடுத்த மாதம் நடைபெறும் நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை விழாவின் தேர் வலம் நிகழ்ச்சிக்கு இடையூறாக, பாலப் பணிக்காக மண் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் சாலை அடைக்கப்பட்டுள்ளது. எனவே ரயில்வே பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top