பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரத்தில் தேர்தல் விழிப்புணர்வு படகுப் போட்டி.

IT TEAM
0

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், அதிராம்பட்டினம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் மீன்பிடிதுறைமுகத்தில் தேர்தல் விழிப்புணர்வு படகு போட்டி நடைபெற்றது. இதில் 9 நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி தங்கள் படகுகளை செலுத்தினர். கழுமங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த சின்னராசு முதல் பரிசையும், சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த கந்தசாமி 2-வது பரிசையும், மனோகரன் 3-வது பரிசையும் பெற்றனர்.

போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் என்.சக்திவேல் தொடங்கி வைத்தார். பேராவூரணி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மேலும் கடலோர பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப் பட்டது.

நிகழ்ச்சியில் பேராவூரணி தாசில்தார் க.ஜெயலெட்சுமி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், தேர்தல் துணை தாசில்தார் எஸ்.யுவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top