வடகாடு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து இந்த ஆண்டுக்கான திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விழாக்குழுவினரால் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை, மாலை வேளைகளில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
வடகாடு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்.
April 30, 2019
0
Tags
Share to other apps