கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி.

IT TEAM
0

பேராவூரணி அருகே உள்ள கரிசவயலில், கரிசவயல் உதவும் கரங்கள் அமைப்பு தொடக்கவிழா திங்கள் கிழமை அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.எம்.வேலாயுதம் முன்னிலை வகித்தார். அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சி.இலக்கியச் செல்வன், கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையா ளர் பாஸ்கரன், இமாம் முகமது மைதீன், கைஃபா அமைப்பு கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.  நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 900 க்கும் மேற்பட்ட பலா, கொய்யா, வேம்பு உள்ளிட்ட பல்வேறு நாட்டு மாங்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. நிகழ்வுகளில் ஜமாஅத் நிர்வாகிகள், கிராமத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் எஸ்.அசோக் வரவேற்றார். உதவும் கரங்கள் அமைப்பு பொறுப்பாளர் தமீம் நன்றி கூறினார்.
நன்றி: தீக்கதிர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top