பேராவூரணி காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

IT TEAM
0



பேராவூரணி அருகே காயமடைந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர். பேராவூரணி அருகே காலில் காயமடைந்த நிலையில் முட்புதரில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் மயங்கி கிடந்தது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் சமூக ஆர்வலர்கள் மருதஉதயகுமார், மணிகண்டன், அருண் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த மயிலை மீட்டு பேராவூரணி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடைத்துறை டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் உடனடியாக மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மயில் பறந்தபோது மரக்கிளையில் மோதி காலில் அடிபட்டிருக்கலாம் என கூறப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய மயில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால் முன்னிலையில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதியில் பறக்க விடப்பட்டது. காயமடைந்த தேசிய பறவையான மயிலை மீட்டு சிகிச்சை அளிக்க உதவிய இளைஞர்களை தாசில்தார், வனச்சரக அலுவலர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

நன்றி: தினகரன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top