ஆவுடையார்கோவில் தாலுகா முழுவதிலும் தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் பயிற்கள் சேதம், விவசாயிகள் வேதனை.

IT TEAM
0



ஆவுடையார்கோயில் பகுதியில் அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் சுமார் 50,000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரி பகுதியான இங்கு வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே வருடா வருடம் நெல் விளையும், இதற்கு முன் கடந்த 2018- 19-20 ஆகிய ஆண்டுகள் சரியான மழைப்பொழிவு இல்லாததால் ஆவுடையார்கோவில் பகுதிகளில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக விவசாயம் பொய்த்து போனது. இந்த வருடம் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் தங்களுடைய வயல்களில் பிபிடி 5204 என்கின்ற நெல் ரகத்தை சாகுபடி செய்துள்ளனர்.


இப்பொழுது குறிப்பிட்ட ஏரியாக்களில் அதிகப்படியான புகையான் பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்த முடியாத சூழலில் பல ஆயிரம் ஏக்கர் நெல் மணிகள் புகையான் பூச்சிகளின் தாக்குதலால் முற்றிலும் வைக்கோல் போலாகிவிட்டது. இந்நிலையில் டிசம்பர் 31, மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி பெய்த கனமழையால் ஆவுடையார் கோவிலை சுற்றியுள்ள புண்ணியவயல், எழுநூற்றி மங்களம், கருப்பூர், விளானூர், செம்மனாம் பொட்டல் ,மாவடிக் கோட்டை, கருங்காடு, சிருமருதூர், பாண்டி பத்திரம், குலத்து குடியிருப்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள்அதிகப்படியான மழை பொழிவாள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது,எனவே கடந்த ஆண்டு விவசாயம் கடைசி கட்டமாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அழுகிய நிலையில் காப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படவில்லை.


அதேபோல இந்த ஆண்டும் நெல் அறுவடை காலத்தில் கனமழை பெய்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top