பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் சின்னதுரை நிதியுதவி

IT TEAM
0


பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி.

தஞ்சாவூர் மாவட்டம், 
பேராவூரணி செந்தமிழ் நகர் 
நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள், வைரக்கண்ணு - நீலா தம்பதி. திருவிழாக்களில் ஊசி மணி பாசி விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் சின்னதுரை, தான் சார்ந்த சமூகத்தில் முதல்முறையாக 12 ஆம் வகுப்பு படித்து, தேர்ச்சி பெற்று, திருச்சி கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி ஜியாக்கிரபி படிப்பதற்காக சேர்ந்துள்ளார். கல்வி கட்டணம் கூட கட்ட வழியில்லாமல் இருந்த நிலையை,

தீக்கதிர் மாவட்ட நிருபர் 
திரு ஜகுபர் அலி அவர்கள் செய்தியாக வெளிக்கொணர்ந்து, 
தமது முகநூல் பக்கத்தில் 
பதிவிட்டதை தொடர்ந்து, 
நமது பேரைத் துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில்
அந்த மாணவரின் கல்வி தேவைக்கு உதவியாக ரூபாய் பத்தாயிரம் வழங்கினோம்...

திரு ஜகுபர் அலி தலைமையில்,
ஆசிரியர் காஜா மொய்தீன் முன்னிலையில் 
பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார்கள்....

முனைவர்
வேத கரம்சந்த் காந்தி
பொருளாளர் - பேரை துளிர் நண்பர்கள்
அறக்கட்டளை, பேராவூரணி..
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top