பேராவூரணி வர்த்தக சங்க கட்டிடத்தில் மாஸ்டர் சென்சாய் அர்ஜின் ராஜ் அவர்களின் வாரியர்ஸ் புடோ டான் கராத்தே பயிற்சி பள்ளியின் கிளை துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு, நகர வர்த்தக சங்க தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் மற்றும் பொருளாளர் சாதிக் அலி முன்னிலை வகித்தனர். விழாவில் வர்த்தக சங்க கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன், ராஜராஜன் கல்வி நிறுவனத் தலைவர் மனோன்மணி ஜெய்சங்கர், ஆசிரியர் ஜெய்சங்கர், கவுன்சிலர்கள் நீலவேணி நீலகண்டன், மகாலட்சுமி சதீஷ்குமார், ஆதனூர் காரல்மார்க்ஸ், பழைய பேராவூரணி ஆனந்தன், பேராசிரியர் வேத. கரம்சந்த் காந்தி, அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத. உதயகுமார், கராத்தே கிருஷ்ணகுமார், ஆதனூர் மரிய சூசை, பழைய பேராவூரணி காமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் புடோ டான் கராத்தே பயிற்சி பள்ளியின் நிறுவனர் சென்சாய் ஸ்பர்ஜன்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
பேராவூரணியில் வாரியர்ஸ் புடோ டான் கராத்தே பயிற்சி பள்ளி கிளை துவக்க விழா.
September 10, 2023
0
Tags
Share to other apps