கர்நாடகாவிடம் இருந்து காவிரிக்கு உரிய தண்ணீர்
பெற்றுத் தர வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரியில் 192 டி.எம்.சி., தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதைப்போல
பேராவூரணி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால்
பேராவூரணி வட்டார பகுதிகளில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி தாலுக்காவில் பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளும், விவசாய சங்கம், விவசாய சங்க தொழிற்சங்கத்தினரும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களால் பேராவூரணி நகரில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு அதிரடிப்படையினரும், ஊர்க்காவல் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணியில் பேராவூரணி நகர காவல்துறையினரும், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.