பேராவூரணி திருக்குறள் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் தமிழ்ப்பல்கலைக்கழக மையம் -பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவைக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்னர். தலைவராக பாவலர் மு.தங்கவேலனார் அவர்களும், செயலாளராக பேராசிரியர் கி.புவனேசுவரி அவர்களும், பொருளாளராக ஆயர் த.ஜேம்ஸ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். பேராவூரணி திருக்குறள் பேரவை விதிகளின் படி இரண்டாண்டுகளுக்கு இவர்கள் இந்த பொறுப்பினை வகி்ப்பார்கள். முன்னதாக திருக்குறள் பேரவை மாநாட்டினை இவ்வாண்டு நவம்பர் 12 இல் நடத்துவது என்றும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்ப்பட்டது.
நிகழ்வில் ஆறு. நீலகண்டன், சித.திருவேங்கடம், கொன்றை சண்முகம், மெய்ச்சுடர் நா.வெங்ஙகடேசன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆறு. நீலகண்டன், சித.திருவேங்கடம், கொன்றை சண்முகம், மெய்ச்சுடர் நா.வெங்ஙகடேசன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.