அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வியின் ஒரு பிரிவாக பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் வகையில் தற்காப்பு கலையின் ஒரு பிரிவாகிய கராத்தே பயிற்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியம் முடச்சிக்காடு, மரக்காவலசை கொடிவயல், கழனிவாசல் ஆகிய 3 நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் 75 மாணவிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
மொத்தம் 5 மாதங்கள் நடைபெறும் இப்பயிற்சியின் தொடக்க விழா முடச்சிக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் மாறன் வரவேற்று பேசினார்.
மேற்பார்வையாளர் டேவிட் சார்லஸ் சிறப்புரையாற்றினார். கராத்தே ஆசிரியர் பாண்டியன், கராத்தே பயிற்சியில் மாணவிகள் பின்பற்ற வேண்டிய அடிப்படை முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். ஆசிரியர் தங்கராஜன் நன்றி கூறினார். தொடக்க விழாவில் வட்டார வளமைய பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுநர் ஷாஜிதாபானு, ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர்.