பேராவூரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் பாதியிலேயே நிறுத்தம் இதனால் பொதுமக்கள் அவதி.
பேராவூரணி நகர்புற பகுதிகளில் தினசரி வினியோகம் செய்யப்படும் குடிநீர் இன்று (15.09.2016) வெறும் 35 நிமிடங்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பேராவூரணிவாசிகள் மிகுந்த அவதிப்பட்டுவருகின்றனர். மேலும் பொதுமக்கள் பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
பேராவூரணி நகர்புற பகுதிகளில் பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினசரி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை குடிநீர் வினியோகப்பட்டுவருகிறது. ஆனால் இன்று இதற்கு மாறாக காலை 7 மணிக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் 35 நிமிடங்களுக்கு பிறகு திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள், மகளிர், குழந்தைகள் தங்களது அன்றாட பயன்பாட்டிற்கு கூட தண்ணீர் இன்றி திண்டாடி வருகின்றனர். மேலும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது போன்று பொறுப்பற்று மெத்தனமாக செயல்பட்டுவரும் பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல தரப்பட்ட பொதுமக்களும் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.