சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் டிசம்பர் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தரக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்துள்ளது.