அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையில் Energy security for Tamil Nadu - Role of Renewables என்ற தலைப்பில் ஒருநாள் தேசியக்கருத்தரங்கு கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழா தொடக்கத்தில் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆயிஷா மரியம் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
காரைக்குடி சிஇசிஆர்ஐ ( CECRI ) ஓய்வு பெற்ற விஞ்ஞானி முனைவர் எம்.ஜெயச்சந்தின் மற்றும் முதுநிலை முதன்மை விஞ்ஞானி முனைவர் எம். பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள். மேலும் சிஇசிஆர்ஐ பாலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முன்னதாக விழாவை Physics Research Association முனைவர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை இத்துறை ஆராய்ச்சி மாணவி நிவேதா ஷாஜஹான் தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கத் தலைப்பு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற இயற்பியல் துறை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் சேகர் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் சுற்றுவட்டாரக்கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.