தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளது. முக்கியமாக உலக நாடுகள் பலவும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்கா சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.
இந்நிலையில் சிங்கப்பூர் தரை போக்குவரத்துத் துறை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அதிவேக ரயில் ஒன்றை இயக்கி வருகிறது. மேலும், அதன் முக்கிய ரயில் நிலையங்களிலும் தீபாவளியை முன்னிட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் பூவான் இந்த ரயிலை தொடங்கி வைத்து, அதில் பயணம் மேற்கொண்டார்.