பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி அன்று மூத்த குடிமகனும், காந்தியவாதியுமான எல்.சி ஆசிரியர் என்ற இள. சிதம்பரம் கௌரவிக்கப்பட்டார்.
பட்டுக்கோட்டை சாலை காந்தி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு 148 வது பிறந்த தினத்தையொட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத்தலைவர் பொறி கனகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பொறி இளங்கோவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
மூத்த குடிமகனும், காந்தியவாதியுமான எல்.சி ஆசிரியர் என்ற இள.சிதம்பரம் (வயது 97) காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் லயன்ஸ் சங்கம் சார்பில் மூத்த உறுப்பினர் இ.வீ.காந்தி எல்.சி ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் குருவிக்கரம்பை சம்பத், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆசிரியர் ராமநாதன், மைதீன் பிச்சை, நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.