நாளை முதல் நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம்-களிலிருந்து ரூ.50, 100 நோட்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து 100 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நேற்றும், இன்றும் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்-கள் செயல்படவில்லை. இதனால் 50, 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் அத்தியாவசிய சின்னசின்ன பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களிலிருந்தும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களில் ரூ.50,100 ரூபாய் நோட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஏடிஎம்-களில் ரூ.50 நோட்டுகள் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.