ரூ. 500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Unknown
0ஏழை, எளிய, உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மத்திய அரசால், ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருவதால் மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பொதுச் செயலாளர் வி.சி.முருகையன் தலைமை வகித்தார். தலைவர் அரங்க.குணசேகரன், உழவர் உழைப்பாளர் இயக்க தலைவர் கோ.திருநாவுக்கரசு, ஆறு.நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம் மற்றும் த.ஜேம்ஸ், சித.திருவேங்கடம், நா.வெங்கடேசன், ச.அப்துல் சலாம், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top