பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வாட் வரியை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும்.
இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுதது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹3.79 காசுகளும், டீசல் விலை ₹1.74 காசுகளும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.