பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலகு-1 மற்றும் 2 சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வியாழனன்று நடைபெற்றது.
நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகில் பேரணியை காவல்துறை ஆய்வாளர் ஜி.ஜனார்த்தனன் தொடங்கி வைத்தார். பேரணி மெயின் ரோடு, சேதுசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் காவல்துறை உதவி ஆய்வா
ளர் ஆர்.தமிழரசன், தலைமைக் காவலர் சி.குமாரவேல், பேராசிரியர்கள் என்.பழனிவேல், ஆர்.ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் மாணவி
கள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
நன்றி : தீக்கதிர்