பேராவூரணியில் தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், பட்டுக்கோட்டை சாலை அமிர்தம் மஹாலில் 11ஆவது சிறப்பு பயிற்சி மற்றும் திறனாய்வு முகாம் ஞாயிறன்று நடைபெற்றது.கராத்தே பயிற்சி பள்ளி முதல்வர் மற்றும் நிறுவனர் சென்சாய் கே.பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தலைமை பயிற்சியாளர் ரென்சி எஸ்.சரவணன் மாணவர்களுக்கு கருப்புப் பட்டை மற்றும் சான்றிதழை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் ரென்சி மணிசங்கர், சென்சாய் வேலுச்சாமி, உதவி பயிற்சியாளர்கள் ஏ.கே.சம்சுதீன், திவ்யராஜ், ஸ்பர்சன் ராஜ் மற்றும் தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர்