புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாட்டில் இத்திட்டத்தை எதிர்த்தும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் போராட்டம் வெடித்தது.
2-வது கட்டமாக நடைபெற்று வரும் போராட்டத்தின் 10-வது நாளான நேற்று பெண்களும் சிறுவர்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனைதொடர்ந்து சிறுவர்கள் அரை நிர்வாணத்துடன் குட்டிகர்ணம் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கோஷம் போட்டபடியே குட்டி கர்ணம் அடித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.